சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் - தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியில் டிரைவ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

சர்வதேச கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் சாலை பாதுகாப்பு டி20 லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளின் முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

இன்று (செப்டம்பர் 10) முதல் அக்டோபர் 1 வரை இந்த தொடர் கான்பூரில் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும், ஜாண்டி ரோட்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

இந்த போட்டி இன்று நடக்கும் நிலையில், இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக சச்சின் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியில், அவரது ஐகானிக் ஷாட்டான ஸ்டிரைட் டிரைவ்களை அருமையாக ஆடினார் சச்சின் டெண்டுல்கர். 50 வயதிலும் சச்சின் டெண்டுல்கர் டிரைவ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…

வயதானாலும் சச்சின் சச்சின் தான். சச்சின் டெண்டுல்கருக்கு வயது வெறும் எண் தான். பயிற்சியில் ஆடியதை போலவே சச்சின் டெண்டுல்கர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.