சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் ஆடி, அதிக சதங்கள், அதிக ரன்கள்  என பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்ட சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று பிறந்தநாள். கொரோனாவால் நாடே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்த சச்சின், தனது 47வது பிறந்தநாளை கொண்டாடவில்லை. 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டிலிருந்து அடுத்த 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி 100 சர்வதேச சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த அபாரமான வீரர். 

மாபெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 5 ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளார். 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், பாகிஸ்தானுக்கு 1992ல் உலக கோப்பையை வென்று கொடுத்த இம்ரான் கான், நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லி மற்றும் ஆஸ்திரேலியாவின் மால்கம் மார்ஷல், இயன் போத்தம் ஆகிய ஐவரையும் தேர்வு செய்துள்ளார்.

“நான் பார்த்து வளர்ந்த டாப் 5 ஆல்ரவுண்டர்கள்.. அவர்களில் ஒருவருடன் நான் ஆடியிருக்கிறேன்.. அவர்தான் கபில் தேவ். அடுத்தது இம்ரான் கான். அவருக்கு எதிராக நான் ஆடியிருக்கிறேன்.

நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லி. அவருக்கு எதிராகவும் நான் ஆடியிருக்கிறேன். ஆஸ்திரேலியாவின்ன் மால்கம் மார்ஷல் மற்றும் இயன் போத்தம். இவர்கள் ஐவரும் தான் நான் பார்த்து வளர்ந்த டாப் ஆல்ரவுண்டர்கள். அவர்களை பார்த்து வளர்ந்த நான், அவர்களுடன் விளையாடும் வாய்ப்பையும் பெற்றேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.