Asianet News TamilAsianet News Tamil

ஷமி - புவனேஷ்வர் குமார்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா யாரை எடுக்கலாம்..? மழுப்பாம நறுக்குனு பதில் சொன்ன மாஸ்டர் பிளாஸ்டர்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயமடைந்தார். அதனால் அந்த போட்டியில் பாதியில் களத்திலிருந்து வெளியேறிய புவனேஷ்வர் குமார் பின்னர் பந்துவீசவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆடவில்லை. 
 

sachin tendulkar picks his choice between shami and bhuvneshwar kumar for west indies match
Author
England, First Published Jun 26, 2019, 4:26 PM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியாவும் இங்கிலாந்தும் பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பிவருகிறது. 

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளது. அதேநேரத்தில் இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. sachin tendulkar picks his choice between shami and bhuvneshwar kumar for west indies match

இந்திய அணிக்கு வீரர்கள் காயம்தான் சிறிய பின்னடைவாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கை கட்டைவிரலில் அடிபட்ட தவான், காயம் குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என்பதால் உலக கோப்பையிலிருந்தே விலகினார். அவரை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயமடைந்தார். அதனால் அந்த போட்டியில் பாதியில் களத்திலிருந்து வெளியேறிய புவனேஷ்வர் குமார் பின்னர் பந்துவீசவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆடவில்லை. 

sachin tendulkar picks his choice between shami and bhuvneshwar kumar for west indies match

அதனால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக களமிறங்கிய ஷமி, அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், புவனேஷ்வர் குமார் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என தெரியவில்லை. 

இந்நிலையில், புவனேஷ்வர் குமார் முழு உடற்தகுதியை பெற்றுவிட்ட நிலையில், புவனேஷ் - ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், ஷமியிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் இருவரில் என்னுடைய சாய்ஸ் புவனேஷ்வர் குமார் தான். ஏனெனில் அவர்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர். எனவே அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும். கிறிஸ் கெய்லுக்கு புவனேஷ்வர் குமாரால் தான் நல்ல டஃப் கொடுக்க முடியும் என சச்சின் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios