Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! ஆர்பி சிங்கின் 2 சர்ப்ரைஸ் தேர்வுகள்

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஆர்பி சிங் தேர்வு செய்துள்ளார். 
 

rp singh picks india squad for t20 world cup
Author
First Published Sep 10, 2022, 10:22 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு கடும் போட்டி நிலவுவதால், உலக கோப்பைக்கான இந்திய அணியை ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அணியை தேர்வு செய்தும்வருகின்றனர்.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை ஆர்பி சிங் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்களை ஆர்பி சிங் தேர்வு செய்துள்ளார்.

ஜடேஜா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்திருப்பதால் டி20 உலக கோப்பையில் ஆடுவது சந்தேகம். எனவே அக்ஸர் படேலை அணியில் எடுத்துள்ளார் ஆர்பி சிங். மேலும் 2 ஸ்பின்னர்களாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவை அணியில் எடுத்துள்ளார். இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஓரங்கட்டிவிட்டு, டி20 அணியில் எடுக்கப்படாத குல்தீப் யாதவை எடுத்துள்ளார் ஆர்பி சிங்.
ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, தீபக் சாஹர், அர்ஷ்திப் சிங் ஆகியோருடன் முகமது ஷமியையும் எடுத்துள்ளார் ஆர்பி சிங். 

கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் கூட ஆடிராத முகமது ஷமி, டி20 அணிக்கான திட்டத்தில் இல்லை என்று தேர்வாளர்களே குறிப்பிட்டுவிட்ட நிலையில், ஆசிய கோப்பையிலும் அவர் ஆடவில்லை. இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான தனது அணியில் ஷமியை எடுத்துள்ளார் ஆர்பி சிங்.

இதையும் படிங்க - ஸ்டூவர்ட் பின்னி அதிரடி அரைசதம், யூசுஃப் பதான் காட்டடி ஃபினிஷிங்! 20ஓவரில் 217ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ்

ஆர்பி சிங் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios