இது கேகேஆர் கோட்டை: அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி – டாஸ் வென்று பவுலிங்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி, தனது சொந்த மைதானத்தில் கேகேஆர் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஆர்சிபி அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேமரூன் க்ரீன், கரண் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், வைஷாக் விஜயகுமார், ரீஸ் டாப்ளே மற்றும் சௌரவ் சௌகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், பலம் வாய்ந்த கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மகிபால் லோம்ரார், கரண் சர்மா, லாக்கி ஃபெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ராமன் தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷிக் ராணா.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 19 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 14 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.