Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்து அணி அதிரடி தொடக்கம்.. ராய் - பேர்ஸ்டோ அரைசதம்!! கஷ்டப்பட்டு முதல் விக்கெட்டை போட்ட வங்கதேசம்

தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் சிறப்பாக தொடங்கினர். பேர்ஸ்டோ சற்று நிதானமாக ஆட, மறுமுனையில் ராய் அதிரடியாக ஆடினார். 

roy and bairstow scores fifty england start well against bangladesh
Author
England, First Published Jun 8, 2019, 4:44 PM IST

இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி கார்டிஃபில் நடந்துவருகிறது. 

இரு அணிகளுமே ஏற்கனவே ஆடிய 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் சிறப்பாக தொடங்கினர். பேர்ஸ்டோ சற்று நிதானமாக ஆட, மறுமுனையில் ராய் அதிரடியாக ஆடினார். ராய் - பேர்ஸ்டோ ஆகிய இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதாலும் இருவரும் பெரிதாக ஸ்பின்னில் ஆடமாட்டார்கள் என்பதாலும் இடது கை ஆஃப் ஸ்பின்னரான ஷாகிப் அல் ஹாசனை வைத்து தொடங்கினார் வங்கதேச கேப்டன் மோர்டஸா. 

roy and bairstow scores fifty england start well against bangladesh

ஆனால் மோர்டஸாவின் திட்டத்தை வெற்றியடைய விடாமல் பார்த்துக்கொண்டனர் ராயும் பேர்ஸ்டோவும். இருவரும் ஷாகிப்பின் பந்தை நிதானமாக பார்த்து ஆடினர். மோர்டஸாவின் முதல் ஸ்பெல்லை அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய ராய் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 128 ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டையே போட முடியாமல் திணறிய வங்கதேச அணிக்கு பேர்ஸ்டோவை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் மோர்டஸா. இதையடுத்து ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ராய் சதத்தை நெருங்கிவிட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios