ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, சக வீரர்களுடனும் முன்னாள் வீரர்களுடனும் உரையாடுவது என ஆக்டிவாக இருந்துவருகின்றனர். 

ரோஹித் சர்மா இந்தியாவின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்ட்டாக 3 இரட்டை சதங்களை விளாசிய சாதனைக்கு சொந்தக்காரர். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் அசாத்தியமான சம்பவங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ரோஹித் சர்மாவிடம், இந்தியாவின் ஆல்டைம் 5 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், சேவாக் என ஒரே காலக்கட்டத்தில் ஆடிய 5 வீரர்களின் பெயரை தெரிவித்தார். 

அந்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, நான் சிறு வயதில் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கைத்தான் பார்க்க ஆரம்பித்தேன். அதன்பின்னர் ராகுல் டிராவிட்(bhai). ராகுல் டிராவிட் 2002ல் இங்கிலாந்து தொடரில் சதங்களை குவித்தார். அந்த தொடரில் பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார் டிராவிட்.

அடுத்தது சேவாக் bhai. இன்னிங்ஸின் தொடக்கத்தில் டாப் ஆர்டராக அவர் ஆடும் விதம் அபாரமானது. தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி எதிரணியில் பாதி பவுலர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடுவார். அடுத்தது விவிஎஸ் லட்சுமணன் மற்றும் தாதா(கங்குலி) என்றார் ரோஹித் சர்மா.