உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தானுக்கு அபாரமாக ஆடி 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, மற்றுமொரு இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் கூட 140 ரன்களில் அவுட்டானார். அதனால் கடும் அதிருப்தியடைந்தார். 

எனவே பாகிஸ்தானிடம் விட்டதை ஆஃப்கானிஸ்தானிடம் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரன் மட்டுமே அடித்து முஜீபுர் ரஹ்மானின் சுழலில் கிளீன் போல்டாகி வெளியேறினார் ரோஹித். 

இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ரோஹித்தும் ராகுலும் பெரிய இன்னிங்ஸ் ஆடும் முனைப்பில் தான் நிதானமாக தொடங்கினர். முதல் நான்கு ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. நிதானமாக தொடங்க நினைத்தபோதிலும் ரோஹித்தை நிலைக்க அனுமதிக்கவில்லை முஜீபுர் ரஹ்மான்.