Asianet News TamilAsianet News Tamil

நான் என் வேலைய மட்டும்தான் பார்ப்பேன்.. அதெல்லாம் கண்டுக்குறதே இல்ல.. ரோஹித் சர்மா அதிரடி

இந்த உலக கோப்பையில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சங்கக்கராவின்(4 சதங்கள்) சாதனையை முறியடித்தார். 
 

rohit sharma does not bothered about his records
Author
England, First Published Jul 7, 2019, 5:25 PM IST

நடப்பு உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோற்று 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அவை இரண்டிலுமே இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்துவருகிறார். 

இந்த உலக கோப்பையில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சங்கக்கராவின்(4 சதங்கள்) சாதனையை முறியடித்தார். 

rohit sharma does not bothered about his records

லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். 

rohit sharma does not bothered about his records

இப்படியாக இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடி சதங்களை விளாசி ரன்களை குவித்து அணியின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக ரோஹித் சர்மா திகழ்கிறார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரோஹித்திடம், அவரது சாதனை சதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, புதிய சாதனைகளை படைப்பது குறித்தெல்லாம் நான் கண்டுகொள்வதேயில்லை. நான் நன்றாக ஆடினால் அணி வெற்றி பெரும். எனது பணி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்வதுதான். எனவே அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios