Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 ரோஹித் சர்மாவிற்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திய ஆவேஷ் கான்..! டி காக்கும் ஏமாற்றினார்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா மீது அழுத்தம் போட்டு ஆரம்பத்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டார் ஆவேஷ் கான்.
 

rohit sharma and quinton de kock out earlier in the match against delhi capitals in ipl 2021 uae leg
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 2, 2021, 4:07 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் பிளே ஆஃபிற்கு சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் முன்னேறிவிட்ட நிலையில், பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், டெல்லி கேப்டள்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா மீது அழுத்தம் போட்டு வீழ்த்தி ஆவேஷ் கான். ஆவேஷ் கான் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் முதல் 4 பந்துகளிலும் ஒரு ரன் கூட அடிக்கவில்லை ரோஹித் சர்மா. 4 பந்தில் ரன் அடிக்காமல் நெருக்கடிக்குள்ளான ரோஹித், 5வது பந்தை தூக்கியடிக்க முயன்று ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் ஆடட்மிழந்தார்.

அதன்பின்னர் டி காக்குடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். கடந்த 5 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் நிதானமாக ஆடிவருகிறார். பவர்ப்ளேயில் மும்பை அணி வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்தது.

அணியின் ஸ்கோர் உயராததால் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்க, அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் டி காக் 19 ரன்னில் ஆட்டமிழக்க, சூர்யகுமாருடன் சவுரப் திவாரி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios