ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் அவசரப்படாமல் நிதானமாக தொடங்கி இன்னிங்ஸை கொஞ்சம் கொஞ்சமாக பில்ட் செய்தனர். 

குல்டர்நைல் வீசிய 8வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடியை தொடங்கினார் தவான். நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்ரேட் குறைந்துவிடாமலும் இருவரும் ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். ஸ்டார்க், குல்டர்நைல், கம்மின்ஸ், ஸாம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் மாறி மாறி பந்துவீசியும் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 127 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 57 ரன்களில் குல்டர்நைலின் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தவானுடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.