Asianet News TamilAsianet News Tamil

என் கெரியரில் நான் எதிர்கொண்டதுலயே இதுதான் பெஸ்ட் ஓவர்.. மனம் திறந்து பாராட்டிய பாண்டிங்.. வீடியோ

தனது கெரியரில் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த ஓவர் எது என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

ricky ponting reveals the best over he has ever faced in his career video
Author
Australia, First Published Apr 10, 2020, 8:36 PM IST

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதனால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்தாகிவிட்டன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதனால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, முன்னாள் - இந்நாள் வீரர்கள் தங்களுக்குள் உரையாடுவது என பொழுதை கழிப்பதோடு, ரசிகர்களையும் எண்டர்டெய்ன் செய்துவருகின்றனர்.

ricky ponting reveals the best over he has ever faced in his career video

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 2005 ஆஷஸ் தொடரின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கை ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் அவுட்டாக்கும் ஓவரை பதிவு செய்து, பார்க்கும்போதே புல்லரிக்கிறதா..? ரசிகர்களின் ஆரவாரத்தை பாருங்கள் என்று டுவீட் செய்திருந்தது. 

உண்மையாகவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஓவர் அது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் தான் முக்கிய காரணம். அவர் தான் அந்த போட்டியின் ஆட்டநாயகனும் கூட. 

ricky ponting reveals the best over he has ever faced in his career video

இரண்டாவது இன்னிங்ஸில் 282 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. ஆஸ்திரேலிய அணியை 279 ரன்களுக்கு சுருட்டி இங்கிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டும் ஒன்று.

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை 5 பந்தில் டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஃப்ளிண்டாஃப். இரண்டாவது இன்னிங்ஸின் 13வது ஓவரின் முதல் பந்தில் ஜஸ்டின் லாங்கரை வீழ்த்திய ஃப்ளிண்டாஃப், அதே ஓவரின் கடைசி பந்தில் ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தினார். வெறும் ஐந்தே பந்தில் பாண்டிங் டக் அவுட். அதுவும் சாதாரணமாக  அவரை அவுட்டாக்கவில்லை. பாண்டிங் அவுட்டானதற்கு முந்தைய 4 பந்துகளிலும் அவரை திணறவிட்டிருந்தார் ஃப்ளிண்டாஃப்.

ricky ponting reveals the best over he has ever faced in his career video

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அந்த டுவீட்டை கண்ட பாண்டிங், நான் எதிர்கொண்டதிலேயே பெஸ்ட் ஓவர் இதுதான். அருமையான ரிவர்ஸ் ஸ்விங் என்று பதிவிட்டு ஃப்ளிண்டாஃபின் பவுலிங்கை பாராட்டியுள்ளார்,

ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகமான வெற்றிகளையும் கோப்பைகளையும் வென்றுகொடுத்த வெற்றிகரமான கேப்டன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட. சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்களுடன் 27 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios