Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு முறையும் வியப்பை ஏற்படுத்தும் பாண்டிங்கின் புத்திசாலித்தனம்..! அவர் சொல்லி வாயை மூடல; விக்கெட்! வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட்டில் பாண்டிங் கூறியதை  போலவே பந்துவீசி ஜாக் லீச்சின் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டீவ் ஸ்மித்.
 

ricky ponting prediction became true once again in ashes fourth test
Author
Sydney NSW, First Published Jan 9, 2022, 7:20 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரிக்கி பாண்டிங். மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் பாண்டிங். அதனால் தான் அவரால் ஆஸ்திரேலிய அணியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாபெரும் வெற்றிகரமான அணியாகவும், அசைக்கமுடியாத சக்தியாகவும் வைத்திருக்க முடிந்தது.

2000ம் ஆண்டுகளில் அவரது கேப்டன்சியில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலிய அணி. பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகளை பறிப்பதில் வல்லமை வாய்ந்தது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. அந்த அணி அப்படி கோலோச்ச முக்கிய காரணம், பாண்டிங்கின் கிரிக்கெட் மூளை தான்.

பாண்டிங் ஆடிய காலத்தில் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமையால் அனைவரையும் வியக்கவைத்தார். ஓய்வுபெற்ற பிறகும் பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் என எந்த ரோல் ஏற்று செயல்பட்டாலும் அதிலும் ரசிகர்களை வியக்கவைக்கிறார்.

பாண்டிங் வர்ணனை செய்யும்போது பலமுறை, அவர் கூறியதைப்போலவே களத்தில் சம்பவங்கள் அரங்கேறும். சிலமுறை அவர் சொல்லி வாயை மூடுவதற்குள்ளாக, அதேமாதிரி நடந்து ரசிகர்களை வியப்படைய செய்யும். அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீன் எப்படி அவுட்டாவார் என்று அவர் சொல்லி முடிக்கும்போது அதே மாதிரி அவர் ஆட்டமிழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், சிட்னியில் நடந்த 4வது ஆஷஸ் டெஸ்ட்டில் டிராவிற்காக போராடிய இங்கிலாந்து அணியின், 9வது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட்  பிராடும் ஜாக் லீச்சும் இணைந்து ஆடிக்கொண்டிருந்தபோது அப்படியான ஒரு துல்லியமான கணிப்பை கணித்து கூறினார். போட்டி முடிய வெறும் 3 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அந்த ஓவரை ஸ்மித் வீசினார். அப்போது, ஆஃப் ஸ்டம்ப்புக்கு (லீச் இடது கை பேட்ஸ்மேன்) வெளியே இருக்கும் ரஃப் பேட்ச்களின் மீது வீசி விக்கெட்டுக்கு ஸ்மித் முயற்சிப்பார் என்று பாண்டிங் கூறிக்கொண்டிருந்தபோதே, அதேமாதிரி ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே இருந்து ரஃப் பேட்ச்சில் வீசி லீச்சை அவுட்டாக்கினார் ஸ்மித். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஆனால் அதன்பின்னர் கடைசி 2 ஓவர்களை பிராடும் ஆண்டர்சனும் இணைந்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடியதால் சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios