Asianet News TamilAsianet News Tamil

சூப்பரான ஆள மிஸ் பண்ணிட்டீங்க பரவாயில்ல.. 4ம் வரிசையில் இவரையாவது இறக்குங்க!! பாண்டிங்கின் அருமையான ஆலோசனை

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இன்னும் இந்திய அணிக்கு தீராத தலைவலியாக இருக்கும் 4ம் வரிசை பேட்டிங்கிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார். 

ricky ponting picks kl rahul for team indias 4th batting position for world cup
Author
India, First Published Mar 16, 2019, 9:36 AM IST

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ricky ponting picks kl rahul for team indias 4th batting position for world cup

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

ricky ponting picks kl rahul for team indias 4th batting position for world cup

இந்நிலையில், பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவித்துவருகின்றனர். முன்னாள் கேப்டன் கங்குலி, யாரும் எதிர்பாராத வகையில் புஜாராவின் பெயரை பரிந்துரைத்தார். முன்னாள் சுழல் ஜாம்பவான் கும்ப்ளே, தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். 

ricky ponting picks kl rahul for team indias 4th batting position for world cup

இந்நிலையில், இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு ஆஸ்திரேலியாவுக்கு 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்.

ricky ponting picks kl rahul for team indias 4th batting position for world cup

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்திய அணி 4ம் வரிசையில் நிறைய வீரர்களை பரிசோதித்துவிட்டது. ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் என பலர் இருக்கலாம். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணி வாய்ப்பளித்திருக்கலாம். ஷ்ரேயாஸ் ஒரு மிகச்சிறந்த வீரர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். ஐபிஎல்லில் அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அவர் சிறந்த தேர்வாக இருந்திருப்பார். ஆனால் அவர் இனிமேல் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், தற்போது இருக்கும் வீரர்களில் கேஎல் ராகுலை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios