Asianet News TamilAsianet News Tamil

அந்த பையன் ஜாலியா ரன் அடிக்கிறான்..! டி20 உலக கோப்பையை அந்த அணி வெல்ல நிறைய சான்ஸ் இருக்கு - ரிக்கி பாண்டிங்

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஜோஷ் இங்லிஸ் சிறப்பாக பேட்டிங் ஆடுவதாகவும், ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பிருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
 

ricky ponting opines josh inglis scoring runs for fun and australia has chance to win t20 world cup
Author
Australia, First Published Aug 19, 2021, 8:02 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால், பாகிஸ்தான் அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆல்டைம் சிறந்த அணிகளில் ஒன்றும், 5 முறை ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற அணியுமான ஆஸ்திரேலிய அணி, இதுவரை ஒருமுறை கூட டி20 உலக கோப்பையை வென்றதில்லை. இந்த முறையும் வெல்வதற்கான வாய்ப்பு மிகக்குறைவே. அண்மையில் வங்கதேசத்திடம் 4-1 என டி20 தொடரை இழந்து மரண அடி வாங்கியது ஆஸ்திரேலிய அணி.

அந்த படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்து டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இன்றுதான் டி20 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், வார்னர், ஸ்மித், மேத்யூ வேட், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்த நிலையில், அலெக்ஸ் கேரி அணியில் இடம்பெறவில்லை.

பிக்பேஷ் லீக்கில் அபாரமாக ஆடிய ஜோஷ் இங்லிஸுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், ஜோஷ் இங்லிஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், இங்லிஸுக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜாலியாக ரன் அடிக்கும் வீரர் அவர். எல்லிஸின் கதையும் சிறந்தது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணி அபாரமான அணி. டி20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios