Asianet News TamilAsianet News Tamil

Joe Root: நீ எதுக்கு இருக்க? எவனும் சரியில்லனு சொல்லவா உன்னை கேப்டனா போட்டாங்க? ரூட்டை கிழித்த பாண்டிங்

அடிலெய்ட் டெஸ்ட்டின் தோல்விக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேசியதை கண்டு அதிருப்தியடைந்த ரிக்கி பாண்டிங், ஜோ ரூட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

ricky ponting brutally slams england test captain joe root for his statement about his team after the defeat in adelaide test
Author
Adelaide SA, First Published Dec 21, 2021, 2:50 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பையை போல முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரு அணிகளும் வெறித்தனமாக விளையாடும்.

ஆனால் இந்த ஆஷஸ் தொடரை பார்க்கையில், இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது. 

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட்டிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் இங்கிலாந்தின் ஆட்டம் மோசமாக இருந்தது.

அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆட்டத்தை டிரா செய்ய போராடினார். 200க்கும் அதிகமான பந்துகளை பேட்டிங் ஆடி போராடி பார்த்தார். ஆனால் டீ பிரேக்கிற்கு பிறகு 9வது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, எஞ்சிய ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

ricky ponting brutally slams england test captain joe root for his statement about his team after the defeat in adelaide test

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன், மைக்கேல் நெசெர் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசினர். சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோல்விகளை அடைந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடரில் படுதோல்விகளை சந்தித்துவருகிறது. பேட்டிங்கை பொறுத்தமடில் அந்த அணியை ரூட் மட்டுமே தனி நபராக தாங்குகிறார். மற்றவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிங்ஸில் ஆடுகின்றனரே தவிர, அனைவரும் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தனது அணியினரின் மோசமான ஆட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ஜோ ரூட், பவுலிங்கை பொறுத்தமட்டில் நாங்கள் நல்ல லெந்த்தில் வீசியிருக்க வேண்டும். அதாவது இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசியிருக்க வேண்டும். 2வது இன்னிங்ஸில் அதை செய்தோம்.  அதனால் தான் ஆஸ்திரேலியாவை சுருட்ட முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுகளை திரும்ப திரும்ப செய்வது வருத்தமளிக்கிறது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இங்கு (ஆஸ்திரேலியாவில்) ஜெயிப்பதற்கு தேவையான அனைத்தும் எங்களிடம் இருப்பதை நான் உறுதியாக நம்புகிறேன். செய்த தவறுகளையே திரும்பத்திரும்ப செய்வதை நிறுத்தினால் போதும். இந்த தோல்விகளிலிருந்து கற்ற பாடங்களின் உதவியுடன் இனிவரும் போட்டிகளில் ஜெயிப்போம் என ரூட் தெரிவித்திருந்தார்.

ricky ponting brutally slams england test captain joe root for his statement about his team after the defeat in adelaide test

ரூட்டின் இந்த பேச்சை கேட்டு கடும் அதிருப்தியடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ரூட்டை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜோ ரூட்டின் கருத்து குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், அணி வீரர்கள் செய்த தவறையே திரும்பத்திரும்ப செய்தால், அதை மாற்றி திருத்தியமைக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? யார் கேப்டன் நீங்கள்தானே? உங்கள் பவுலர்களை சரியான லெந்த்தில் வீசவைக்க முடியவில்லை என்றால், பிறகு களத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?  என கேள்வியெழுப்பினார் பாண்டிங்.

மேலும் இதுகுறித்து பேசிய பாண்டிங், ரூட் திரும்பவும் வந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு கேப்டனாக உங்கள் பேச்சை, வீரர்களை கேட்கவைக்க வேண்டும். அப்படி கேப்டன் பேச்சை கேட்டு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் வீரர்களை தூக்கி எறிந்துவிட வேண்டும். ஒரு கேப்டனாக உங்கள் பேச்சை எந்த வீரர் கேட்பாரோ அவருக்கு வாய்ப்பளியுங்கள். இதுதான் கேப்டன்சி என்று ரூட்டுக்கு கேப்டன்சி பாடம் எடுத்துள்ளார் பாண்டிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios