Asianet News TamilAsianet News Tamil

தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காதீங்க.. ரிக்கி பாண்டிங்கின் முக்கியமான அறிவுரை

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ள போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். 

ricky ponting advice to australia team management ahead of second test against pakistan
Author
Australia, First Published Nov 26, 2019, 10:26 AM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

பிரிஸ்பேனில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 240 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 580 ரன்களை குவித்தது. 340 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ricky ponting advice to australia team management ahead of second test against pakistan

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசினர். இன்னிங்ஸிற்கு தலா 9 விக்கெட்டுகள் வீதம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நாதன் லயன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து அந்த அணி நிர்வாகத்தால் தயக்கம் காட்டப்பட்டது. ஆனால் அபாரமாக பந்துவீசி அவர் தான் முதல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை(7) வீழ்த்தினார். 

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக ஆடியது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில், அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதே அணியுடன் தான் களமிறங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ricky ponting advice to australia team management ahead of second test against pakistan

இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், என்னை கேட்டால் அடுத்த போட்டியிலும் இதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அடுத்த போட்டியில் மைக்கேல் நெசெர் களமிறக்கப்படலாம் என்ற பேச்சு இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதற்கு அவசியமில்லை. ஸ்டார்க்-கம்மின்ஸ்-ஹேசில்வுட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி அபாரமாக செயல்பட்டுள்ளது. நாதன் லயன் உலகின் எந்த நாட்டிலும் எந்த சூழலிலும் எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். எனவே வெற்றிகரமாக செயல்பட்டிருக்கும் ஒரு பவுலிங் ஜோடியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கின் வேகம் குறைந்திருந்தாலும் அவர் கட்டுப்பாட்டுடன் சீமை பயன்படுத்தி நன்றாக வீசுகிறார் என்று பாண்டிங் தெரிவித்தார். 

ricky ponting advice to australia team management ahead of second test against pakistan

முதல் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், நாதன் லயன்.

பென்ச்: பான்கிராஃப்ட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பாட்டின்சன். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios