கேகேஆருக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 14வது சீசனின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சீசனின் முதல் பாதியில் ஆர்சிபி அணி அருமையாக ஆடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. ஆனால் கேகேஆர் அணி இந்த சீசனின் முதல் பாதியில் படுமோசமாக சொதப்பியது.7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா/டிம் டேவிட், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.