பயிற்சியில் ரிவர்ஸ் ஃப்ளிக் ஷாட் ஆடமுயன்று கிளீன் போல்டாகி ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் ஆர்சிபி வீரர் க்ளென் மேக்ஸ்வெல். 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் இந்தியாவில் நடந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவரும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இந்த சீசனின் முதல் பாதியில் அருமையாக விளையாடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய 3 மிகப்பெரிய வீரர்கள் அணியில் இருப்பதால் இந்த முறை கோப்பையை தூக்கும் தீவிரத்தில் உள்ளது ஆர்சிபி அணி. பஞ்சாப் கிங்ஸ் அணியில் கடந்த சில சீசன்களில் சரியாக ஆடாமல் சொதப்பிய மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக ஆடினார். முதல் பாதி சீசனில் 6 இன்னிங்ஸ்களில் 223 ரன்களுடன், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் 10ம் இடத்தில் உள்ளார்.

அதே ஃபார்மை எஞ்சிய சீசனிலும் அமீரகத்தில் தொடரும் முனைப்பில் உள்ளார் மேக்ஸ்வெல். அதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுவருகிறார். பயிற்சியில் ஆர்சிபி அணி ஆர்சிபி ஏ மற்றும் ஆர்சிபி பி என இரண்டு அணிகளாக பிரிந்து சூப்பர் ஓவர் பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது, தனது தனித்துவ மற்றும் அடையாள ஷாட்டான ரிவர்ஸ் ஃப்ளிக் ஷாட்டை ஆடமுயன்று கிளீன் போல்டானார் மேக்ஸ்வெல். ரிவர்ஸ் ஃப்ளிக் ஆடுவதில் வல்லவரான மேக்ஸ்வெல், அந்த ஷாட்டை ஆடமுயன்று ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அந்த சூப்பர் ஓவர் பயிற்சி வீடியோவை ஆர்சிபி பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதோ..

YouTube video player