ஐபிஎல்லில் 150 கிமீ வேகத்தில் வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவரும் நிலையில், அவருக்கு ரவி சாஸ்திரி ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை அசால்ட்டாக செய்கிறார் உம்ரான் மாலிக்.
இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், இந்த சீசனின் அதிவேக பந்தை (157 கிமீ) வீசியுள்ளார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக ரோவ்மன் பவலுக்கு உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசினார். அதுதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 2வது அதிவேக பந்தும் அவர் வீசியதுதான். அதை 155 கிமீ வேகத்தில் வீசினார்.
150 கிமீ வேகத்திற்கு அசால்ட்டாக வீசி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டுவரும் உம்ரான் மாலிக், விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். அதேவேளையில், நல்ல வேகத்தில் வீசும் அவர், லைன் & லெந்த்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்திவருகின்றனர்.
அந்தவகையில், உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, உம்ரான் மாலிக் விரைவில் இந்தியாவிற்காக ஆடுவார். ஆனால் வேகம் இருக்கும் அதேவேளையில், நல்ல ஏரியாக்களில் நல்ல லைன்&லெந்த்திலும் வீசவேண்டும். அப்படி இல்லையெனில் 156 கிமீ வேகத்தில் வீசப்படும் பந்து 256 கிமீ வேகத்தில் பேட்டில் பட்டு பறந்து செல்லும். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல வேகத்தில் வீசுகிறார். அதேவேளையில் நல்ல ஏரியாவில் வீசவேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்தவேண்டும். பேட்ஸ்மேன்களை சர்ப்ரைஸ் செய்யவேண்டும் என்பதை மனதில் வைக்கவேண்டும்.
நல்ல ஏரியாக்களில் 156-157 கிமீ வேகத்தில் வீசவேண்டும். தொடர்ச்சியாக ஸ்டம்ப்புக்கு நேராக பந்துவீசினால் இவர் மிகவும் அபாயகரமாக திகழ்வார். 157 கிமீ வேகம் என்பது நன்றாகத்தான் உள்ளது. டைரக்ஷனை மட்டும் சரிசெய்தால் போதும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
