Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 #DCvsRR டாஸ் ரிப்போர்ட்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிர்ச்சிகர 2 மாற்றங்கள்.! டெல்லி அணியில் ஒரு மாற்றம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

rajasthan royals win toss opt to field against delhi capitals in ipl 2021
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 25, 2021, 3:24 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி தொடக்க வீரர் எவின் லூயிஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, உலகின் நம்பர் 1 டி20 பவுலரான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் ஷாம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், மஹிபால் லாம்ரோர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கார்த்திக் தியாகி, சேத்தன்  சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டப்ரைஸ் ஷாம்ஸி.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்பட்டு, உள்நாட்டு வீரர் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி: 

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர்,  லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, அன்ரிச் நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios