குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 118 ரன்கள் மட்டுமே அடித்து 119 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. ஜெய்ப்பூரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி, மோஹித் சர்மா.

IPL 2023: அவர் தான்யா சூப்பர் கேப்டன்.. சும்மா மிரட்டுறாப்ள..! ரவி சாஸ்திரி புகழும் கேப்டன் யார் தெரியுமா..?

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 20 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்(12), அஷ்வின்(2), ரியான் பராக்(4), ஹெட்மயர்(7), த்ருவ் ஜுரெல்(9) ஆகிய வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 17.5 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. 

IPL 2023: இந்த லெட்சணத்துல பேட்டிங் ஆடுனா எப்படி ஜெயிக்கிறது? SRH பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய பிரயன் லாரா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தான் மிடில் ஆர்டர் பேட்டிங்கை சரித்தனர். 119 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணி விரட்டுகிறது.