ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி. 3 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, 2வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இறங்குகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு முக்கியமான போட்டி என்றாலும், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷடனுடன் தான் ஆடும்.
ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக ஆர்ச்சர் முதல் சில போட்டிகளில் ஆடாத நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான லிவிங்ஸ்டனும் இந்த சீசனிலிருந்து விலகி இங்கிலாந்து சென்றுவிட்டார்.
ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய முக்கியமான வீரர்கள் வெளியேறியதையடுத்து, இருக்கும் 5 வெளிநாட்டு வீரர்களை வைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு, இருக்கும் வீரர்கள் நன்றாக ஆடினால் மட்டுமே வெற்றி வசப்படும்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், உனாத்கத், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
