Asianet News TamilAsianet News Tamil

#PBKSvsRR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகின் நம்பர் 1 டி20 வீரர்.! ஸ்மார்ட் ராஜஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

rajasthan royals probable playing eleven for the match against punjab kings in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 21, 2021, 4:54 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. தலா 6 புள்ளிகளை பெற்றுள்ள இந்த 2 அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமானது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களம் காணவுள்ளன.

ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை ஆகிய, அந்த அணி அதிகமாக சார்ந்திருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே விலகிவிட்டனர். ஆனாலும் கொஞ்சம் கூட அசராத ராஜஸ்தான் அணி, அவர்களுக்கு பதிலாக, கரீபியன் பிரீமியர் லீக்கில் அபாரமாக ஆடி அசத்தி செம ஃபார்மில் இருக்கும் எவின் லூயிஸ், உலகின் நம்பர் 1 டி20 பவுலரான டப்ரைஸ் ஷாம்ஸி ஆகிய வீரர்களை அணியில் ஒப்பந்தம் செய்தது.

இவர்களுடன் கிறிஸ் மோரிஸ், லிவிங்ஸ்டோன் ஆகிய வீரர்களும் உள்ளனர். இழந்த வீரர்களின் பவரை சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து ஈடுகட்டி ஸ்மார்ட்டாக செயல்பட்ட ராஜஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிவம் துபே, லியாம் லிவிங்ஸ்டோன், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி, ஷாம்ஸி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios