ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், லக்னோ அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 5 அணிகளும் போராடுகின்றன.
எனவே இந்த அணிகளுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியம். அந்தவகையில், புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸும், 5ம் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஜிம்மி நீஷம்/ராசி வாண்டர் டசன், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர், ஸ்ரீகர் பரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், ரிப்பல் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
