Asianet News TamilAsianet News Tamil

என் கிரிக்கெட் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிக கடினமான பவுலர் அவருதான்..! ராகுல் டிராவிட் ஓபன் டாக்

ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் டிராவிட், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே யாருடைய பவுலிங் மிகவும் கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 
 

rahul dravid picks toughest bowlers he has ever faced
Author
Bengaluru, First Published Jun 21, 2020, 2:47 PM IST

ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்கவைத்தவர். மெக்ராத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், பிரெட் லீ, ஷோயப் அக்தர், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மலிங்கா, ஸ்டெய்ன் என அவர் ஆடிய காலத்தில் பல திறமையான மற்றும் அதிவேகமாக வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர்.
 
இக்கட்டான பல சூழல்களில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து வெளிநாடுகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காகவே உழைத்து வருகிறார். 

கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். டிராவிட் மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர். ஆஃப் டிரைவ், ஸ்கொயர் கட், லேட் கட், புல் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்டிரைட் டிரைவ், ஸ்வீப் ஷாட் என பேட்டிங்கின் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர் ராகுல் டிராவிட்.

rahul dravid picks toughest bowlers he has ever faced

உலகின் ஸ்டைலான பேட்ஸ்மேனும் டிராவிட் தான். டிராவிட் பேட்டிங் ஆடுவதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மிகவும் ஸ்டைலாக ஆடுவார். அதிலும் பேக் ஃபூட்டில் ஆஃப் திசையில் அவர் அறையும் ஷாட் அபாரமானது. ராகுல் டிராவிட் அவரது கெரியரில் எந்தவொரு சூழலிலும் சுயநலமாக ஆடியதே கிடையாது. அணிக்காக மட்டுமே தனது கெரியர் முழுவதும் ஆடியவர். 

இந்திய அணிக்காக ஒரு வீரராக தனது முழு பங்களிப்பை அளித்த டிராவிட், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்காக உழைத்துவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு இளம் வீரர்களை உருவாக்கும் மகத்தான பணியை செய்த டிராவிட், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்கவைத்தவர். அப்பேர்ப்பட்ட டிராவிட், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே யாருடைய பவுலிங் எதிர்கொள்ள கடினமானது என்று தெரிவித்துள்ளார். 

rahul dravid picks toughest bowlers he has ever faced

“ஃபாஸ்ட் பவுலர்களை பொறுத்தமட்டில் க்ளென் மெக்ராத் தான் எதிர்கொள்ள மிகவும் கடினமான பவுலர். மெக்ராத் அவரது கிரிக்கெட் கெரியரில் உச்சத்தில் இருந்தபோது, அவரை எதிர்கொண்டு ஆடியவன் நான். உண்மையாகவே அவர் மிகச்சிறந்த பவுலர். அவர் அருமையாக வீசும்போது, பேட்ஸ்மேன் அவரது ஆஃப் ஸ்டம்ப்பை ஜட்ஜ் செய்வதும், ஆஃப் ஸ்டம்ப்பை அவரிடம் இருந்து காப்பாற்றுவதும் மிகக்கடினம்.

பேட்ஸ்மேனுக்கு தொடர்ச்சியாக சவால் அளித்துக்கொண்டே இருப்பார். முதல் ஓவரோ, இரண்டாவது ஓவரோ அல்லது 25வது ஓவரோ, இன்னிங்ஸின் எந்த ஓவரை வீசினாலும் ஆக்ரோஷமாகவே வீசுவார் என்று ராகுல் டிராவிட் மெக்ராத்தை புகழ்ந்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios