Asianet News TamilAsianet News Tamil

நான் எல்லாத்துக்கும் ரெடி.. வாயை திறந்து வாய்ப்பு கேட்ட சீனியர் வீரர்

இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ரஹானே.
 

rahane is ready to bat at any position in odi cricket
Author
Mumbai, First Published Jul 11, 2020, 9:51 PM IST

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகாலத்தின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு நிகரான புகழ், பெருமையுடன் திகழ்வதற்கான திறமையும் தகுதியும் இருக்கும் வீரர் அஜிங்க்யா ரஹானே. ஆனால் அவர் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர். பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு தாக்குதல் மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான ஆட்டத்தையும் ஆடக்கூடியவர் ரஹானே. 

ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் அதிக சராசரியை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக சராசரியை வைத்திருப்பவர் ரஹானே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோஹித், கோலி ஆகியோரை விட சிறப்பாக ஆடியிருப்பவர் ரஹானே. 

rahane is ready to bat at any position in odi cricket

டெஸ்ட்டில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் ரஹானே நன்றாகத்தான் ஆடிவந்தார். இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2962 ரன்கள் அடித்துள்ளார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்கி சிறப்பாக ஆடுபவர் ரஹானே. 

நான்காம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, திடீரென 2018ம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பைக்கு(2019) ஓராண்டு இருந்த நிலையில், திடீரென ரஹானேவை ஓரங்கட்டிவிட்டு, நான்காம் வரிசை வீரரை தேடும் பணியில் இறங்கியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். சரியான நான்காம் வரிசை வீரரை 2019 உலக கோப்பைக்கு முன்பு தேர்வு செய்து அந்த இடத்தை நிரப்பாததால், உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி. 

ரஹானே அருமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு அதன்பின்னர் ஒருநாள் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரை நிரப்பிவிட்டனர். அதனால் இனிமேல் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 

rahane is ready to bat at any position in odi cricket

ஆனாலும் ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரஹானே. அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஹானே, ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் வரிசையிலோ, எந்த வரிசையில் ஆடவும் நான் தயாராக இருக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும். எப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு வரும் என தெரியவில்லை. ஆனால் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடுவதற்கான தயாரிப்பில் எப்போதும் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்று ரஹானே தெரிவித்தார்.

இந்திய ஒருநாள் அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு மெசேஜ் கொடுத்துள்ளார் ரஹானே.
 

Follow Us:
Download App:
  • android
  • ios