சொந்த மண்ணில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் அணியில் மாற்றம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 37ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெறுகிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், குஜராத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அஷ்மதுல்லா உமர்சாய் அணியில் இடம் பெற்றுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்:
சாம் கரண் (கேப்டன்), பிராம்சிம்ரன் சிங், ரிலீ ரோஸோவ், லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், அஸ்மதுல்லா உமர்சாய், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா.