Asianet News TamilAsianet News Tamil

#PBKSvsRR பிறந்தநாளும் அதுவுமா கெய்லை ஓரங்கட்டி அதிர்ச்சி வைத்தியம் அளித்த பஞ்சாப் கிங்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

punjab kings win toss opt to field against rajasthan royals in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 21, 2021, 7:31 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.  துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடிமன்னனான கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்கவில்லை. கிறிஸ் கெய்லின் 42வது பிறந்ததினம் இன்று. பிறந்தநாள் அன்று கெய்லை அணியில் சேர்க்காமல் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க்ரம் நல்ல ஃபார்மில் உள்ளார். அண்மையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கூட அருமையாக ஆடியிருந்தார். எனவே தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், அடில் ரஷீத், ஹர்ப்ரீத் ப்ரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், இஷான் போரெல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லாம்ரோர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios