Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 PBKS அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. தமிழக அதிரடி வீரருக்கு மீண்டும் வாய்ப்பு! KKR அணியில் 2 மாற்றங்கள்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

punjab kings win toss opt to field against kkr in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 1, 2021, 7:22 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறுவதற்கு கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பிளே ஆஃபிற்கான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் இருக்கின்றன. ஆனால், கேகேஆர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பிளே ஆஃபிற்கான வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் இன்று துபாயில் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கெய்ல் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளார். மயன்க் அகர்வால் முழு ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பியதால், மந்தீப் சிங் நீக்கப்பட்டுள்ளார். ஹர்ப்ரீத் ப்ராருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் பஞ்சாப் அணியின் ஃபினிஷராக மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், ஷாருக்கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நேதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக டிம் சேஃபெர்ட்டும், சந்தீப் வாரியருக்கு பதிலாக ஷிவம் மாவியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), டிம் சேஃபெர்ட், சுனில் நரைன், டிம் சௌதி, ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios