Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 கேகேஆருக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

punjab kings probable playing eleven for the match against kkr in ipl 2021 uae leg
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 30, 2021, 10:09 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

பிளே ஆஃபிற்கான 4வது அணியாக முன்னேறுவதற்கான பிரதான போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே இருந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கும் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் 11 போட்டிகளில் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் 11 போட்டிகளில் தலா 8 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே பஞ்சாப் அணிக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை தக்கவைக்க கேகேஆருக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டும்.

வெற்றி கட்டாயத்தில் கேகேஆரை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால், கடந்த போட்டியில் ஆடாத மயன்க் அகர்வால், கேகேஆருக்கு எதிராக ஆடுவார். எனவே அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய மந்தீப் சிங் நீக்கப்படுவார்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மார்க்ரம், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்ப்ரீத் ப்ரார், நேதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios