வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. எனவே 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மற்றும் சீனியர் நட்சத்திர பவுலர் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் ஆடவில்லை. ரூட்டுக்கு குழந்தை பிறந்ததால் அவர் முதல் போட்டியில் ஆடவில்லை. ஸ்டூவர்ட் பிராட் முதல் போட்டியில் ஆடாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முதல் போட்டியில் அவர்கள் ஆடாத நிலையில், மான்செஸ்டரில் நாளை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்டில் இவர்கள் இருவரும் கம்பேக் கொடுப்பார்கள். ஜோ ரூட் அணியில் இணைவதால், ஜோ டென்லி நீக்கப்படலாம். அதேபோல, ஸ்டூவர்ட் பிராட் அணியில் இணைவதால், மார்க் உட் நீக்கப்படுவார்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜான் கேம்ப்பெல், கிரைக் பிராத்வெயிட், ஷேய் ஹோப், ப்ரூக்ஸ், ரோஸ்டான் சேஸ், பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), ஷேன் டௌரிச், ரன்கீம் கார்ன்வால், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்.