சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் நாளை நடக்கிறது. அந்த போட்டியில், தீபக் சாஹரை தவிர, இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணிதான் களமிறங்கும். இரண்டாவது போட்டியில் ஆடும்போது தீபக் சாஹருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் அவர் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

எனவே தீபக் சாஹருக்கு பதிலாக அணியில் இணைந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி கடைசி போட்டியில் ஆடுவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஷமி.