3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. 

தவான் காயத்தால் வெளியேறியதால் இந்த தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போவது ராகுலா அல்லது சஞ்சு சாம்சனா என்ற கேள்வி உள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் ஒரேயொரு ஃபாஸ்ட் பவுலருக்கான இடம் மட்டுமே காலியாக உள்ளதாகவும் கேப்டன் கோலி நேற்று தெரிவித்தார். 

எனவே அந்தவகையில் பார்க்கும்போது ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார். மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆறாம் வரிசையில் ஷிவம் துபே, அதற்கடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆடுவார்கள். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தருடன் க்ருணல் பாண்டியா அல்லது ஜடேஜா ஆடுவார். சாஹல் கண்டிப்பாக அணியில் இருப்பார். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமாரும் தீபக் சாஹரும் ஆடுவார்கள். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா/ஜடேஜா, சாஹல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர்.