Asianet News TamilAsianet News Tamil

இந்த போட்டியிலாவது சான்ஸ் கிடைக்குமா..? காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்.. உத்தேச அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.
 

probable playing eleven of england team for second t20 against pakistan
Author
Manchester, First Published Aug 29, 2020, 10:43 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. இதையடுத்து 2வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. 

மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன. இந்த போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம். முதல் போட்டியில் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி அணியில் எடுக்கப்படவில்லை. 

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு, இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது மட்டுமல்லாது, தொடர் நாயகன் விருதையும் வென்ற டேவிட் வில்லிக்கு, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

எனவே இரண்டாவது டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக ஆடிய க்ரெகோரி பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்பில் சரியாக ஆடவில்லை. எனவே இரண்டாவது போட்டியில் வில்லிக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்கள் தான் இறங்குவார்கள்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், அடில் ரஷீத், சகிப் மஹ்மூத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios