ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2 போட்டிகளிலுமே இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. குறிப்பாக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், வழக்கம்போலவே இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம், கேப்டன் அவரை அழைக்கும்போதெல்லாம் முன்வந்து விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளெல்லாம் முக்கியமானவையும் கூட.

ஸ்மித் 4 இன்னிங்ஸ்களில் 3ல் ஆட்டமிழந்தார். அதில் 2 முறை அஷ்வின் 2 முறை ஸ்மித்தை வீழ்த்தினார். இந்திய அணி வெற்றி பெற்ற 2வது டெஸ்ட்டில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார் அஷ்வின்

இந்நிலையில், அஷ்வின் குறித்து பேசியுள்ள பிரக்யான் ஓஜா, அஷ்வினுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்றாக தெரியும். அவருக்கு அணியில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட வீரர் என்றாலே, அவர்களின் உடல்மொழியே வேற லெவலில் இருக்கும். அவர்களுக்கு அணியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமா என்ற பயம் இருக்காது. அதனால் நன்றாக வீசுவார்கள்.

தற்போதைய இந்திய அணியில் நட்சத்திர பவுலராக இருக்கும் அஷ்வின், அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். களத்தில் பவுலிங் யூனிட்டின் கேப்டன் அவர்தான். இவையெல்லாம் இணைந்து, அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட அஷ்வின் சிறப்பாக திட்டமிடுவார். அவர்தான் பவுலிங் யூனிட்டின் தலைவர் என்று ஓஜா தெரிவித்துள்ளார்.