கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 249 ரன்கள் அடித்தது. 250 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, 25வது ஓவரை வீசிய பொல்லார்டு, அந்த ஓவரின் முதல் பந்தை வீசும்போது, க்ரீஸை தாண்டி காலை வைத்தார். அம்பயர் நோ பால் என்று சொல்லிக்கொண்டே நோ பால் கொடுக்க தயாரானார். ஆனால் அவர் நோ பால் என சொன்னதை கவனித்த பொல்லார்டு அந்த பந்தை வீசவில்லை. எனவே அம்பயரால் அதற்கு நோ பால் கொடுக்க முடியவில்லை. நோ பால் கொடுக்க முயன்ற அம்பயர், பொல்லார்டின் ஸ்மார்ட்டான செயலால், டெட் பால் கொடுக்க நேர்ந்தது. அந்த வீடியோ இதோ...