Asianet News TamilAsianet News Tamil

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 வருஷமா டீம்லயே இல்லாதவருக்கு கேப்டன் பொறுப்பு.. செம கம்பேக் கொடுக்கும் அதிரடி மன்னன்

உலக கோப்பை தோல்வி, இந்தியாவுக்கு எதிரான ஒயிட்வாஷ் ஆகியவற்றின் விளைவாக, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் அதிரடியாக மாற்றப்படவுள்ளார்.
 

pollard likely to be appointed as captain of odi and t20 teams of west indies
Author
West Indies, First Published Sep 9, 2019, 12:28 PM IST

உலக கோப்பை தோல்வி, இந்தியாவுக்கு எதிரான ஒயிட்வாஷ் ஆகியவற்றின் விளைவாக, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் அதிரடியாக மாற்றப்படவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன்பின்னர் சொந்த மண்ணில் இந்தியாவிடம் மூன்றுவிதமான போட்டி தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆனது. 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலுமே தோற்றது. 

pollard likely to be appointed as captain of odi and t20 teams of west indies

தொடர் தோல்விகளின் எதிரொலியாக ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜேசன் ஹோல்டரையும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பிராத்வெயிட்டையும் நீக்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளுக்குமே பொல்லார்டை கேப்டனாக நியமிக்கலாம் என தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குநர்களில் பெரும்பாலான வாக்குகள் பொல்லார்டுக்கு ஆதரவாக விழுந்துள்ளன. எனவே பொல்லார்டு விரைவில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

pollard likely to be appointed as captain of odi and t20 teams of west indies

அதிரடி பேட்ஸ்மேனும் அருமையான ஆல்ரவுண்டருமான பொல்லார்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 ஒருநாள் போட்டிகளிலும் 62 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். பொல்லார்டு டி20 அணியில் ஆடிவருகிறார். ஆனால் 2016ம் ஆண்டுக்கு பிறகு பொல்லார்டு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. எனினும் அவர் ஒருநாள் அணியின் கேப்டனாக மீண்டும் அணியில் கெத்தாக இணையவுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios