உலக கோப்பை அணிக்கான சரியான வீரர்களை தேர்வு செய்வதற்காக இளம் வீரர்கள் பலருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. வழக்கமான இந்திய அணியில் இடம்பெறும் சீனியர் வீரர்களில் தவானின் இடம் மட்டும்தான் கேள்விக்குறியாக உள்ளது. தவான் அண்மைக்காலமாக மந்தமாக ஆடுவதுடன் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் அவ்வப்போது காயமடைந்துவருகிறார். எனவே அவருக்கான இடம் சந்தேகம் தான். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதியாக நம்புவதால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

டி20 உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக இடம்பெறும் வீரர்கள் மற்றும் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம். 

அணியில் உறுதியாக இடம்பெறும் வீரர்கள்:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, தீபக் சாஹர், சாஹல். 

இந்த 10 வீரர்களும் அணியில் இடம்பெறுவது உறுதி. 

அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ள வீரர்கள்:

ஷிகர் தவான், மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், தோனி, ஷிவம் துபே, க்ருணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், ஷமி, நவ்தீப் சைனி.

அணியில் இடம்பிடிக்க போராடும் வீரர்கள்:

தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், சூர்யகுமார் யாதவ், அஷ்வின், ஷ்ரேயாஸ் கோபால், உமேஷ் யாதவ், கலீல் அகமது, ஷர்துல் தாகூர்.