Asianet News TamilAsianet News Tamil

கபில் தேவின் 36 வருஷ சாதனையை முறியடித்த பாகிஸ்தான் இளம் வீரர்

மூன்றாவது போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 

pakistan young batsman imam ul haq breaks kapil devs record
Author
England, First Published May 16, 2019, 5:03 PM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 

இந்த தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் 373 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 361 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

மூன்றாவது போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 

pakistan young batsman imam ul haq breaks kapil devs record

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 151 ரன்களை குவித்தார். இதன்மூலம் இளம் வயதில் 150 ரன்களை கடந்த வீரர் என்ற கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார் இமாம் உல் ஹக். கபில் தேவ் 24 வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்களை குவித்தார். இமாம் உல் ஹக் 23 வயது முடிந்து 153 நாட்கள் ஆன நிலையில், 150 ரன்களை குவித்து கபில் தேவின் சாதனையை முறியடித்தார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios