பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் ஒருநாள் தொடரும் அதைத்தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), மார்க்ரம், டெம்பா பவுமா(கேப்டன்), வாண்டெர் டசன், ஹென்ரிச் க்ளாசன், டேவிட் மில்லர், ஃபெலுக்வாயோ, காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, ஷாம்ஸி.

பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), டானிஷ் அஜீஸ், ஆசிஃப் அலி, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது ஹஸ்னைன், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(20) மற்றும் மார்க்ரம்(19) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில்(இன்ன்ங்ஸின் 7வது ஓவர்) வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. இதையடுத்து டெம்பா பவுமாவும் வாண்டெர் டசனும் இணைந்து ஆடிவருகின்றனர்.