ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஏற்கனவே சர்ஃபராஸ் அகமது தூக்கியெறியப்பட்டு டெஸ்ட் அணிக்கு அசார் அலியும் டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுவிட்டனர். 

கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாமல் சர்ஃபராஸ் அகமது அணியிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதேபோலவே டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு அணிகளிலுமே சர்ஃபராஸ் அகமது இல்லை. 

பாபர் அசாம் தலைமையிலான டி20 அணியில், பாகிஸ்தான் அணியின் மறைந்த முன்னாள் வீரர் அப்துல் காதிரின் மகன் உஸ்மான் காதிர் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது அமீர், இஃப்டிகார் அஹமது, இமாத் வாசிம், முகமது இர்ஃபான், ஷதாப் கான், வஹாப் ரியாஸ் ஆகியோரும் டி20 அணியில் உள்ளனர். 

டி20 பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகார் ஜமான், ஹாரிஸ் சொஹைல், இமாத் வாசிம், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அமீர், முகமது ஹாஸ்னைன், முகமது இர்ஃபான், முகமது ரிஸ்வான், முசா கான், ஷதாப் கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ்.

டெஸ்ட் அணி:

அசார் அலி(கேப்டன்), அபித் அலி, அசாத் ஷாஃபிக், பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், இஃப்டிகார் அகமது, காஷிஃப் பாட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், முசா கான், நசீம் ஷா, ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா.