உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை தொடர்ந்து 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் மற்ற நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை தொடர்ந்து 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியை அறிவித்தார். சர்ஃபராஸ் அகமது தலைமையிலான அணியில் முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் ஆகிய சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முகமது ஆமீருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கானுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அபித் அலி, பாபர் அசாம், ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹாஸ்னைன்.

1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகி 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் ஷோயப் மாலிக். இக்கட்டான சூழலில் ஆட்டத்தை அருமையாக எடுத்துச்சென்று பல போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். அவருக்கு அடுத்து அணிக்கு வந்த பல வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 20 ஆண்டுகளாக ஆடிவருகிறார் மாலிக். அணியில் அவரது இருப்பு பாகிஸ்தான் அணிக்கு பலமாக அமையும். அதேபோல மற்றொரு அனுபவ ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸும் அணியில் உள்ளார். இவரும் 16 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். எனவே அனுபவமும் இளமையும் கலந்த நல்ல அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது.