உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடுகிறது பாகிஸ்தான் அணி. 

மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டியில் ஆடும் இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யவில்லை. இரு அணிகளுமே இதற்கு முந்தைய போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் ஆடுகிறது. 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், சர்ஃபராஸ் அகமது(கேப்டன்), இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷாஹீன் அஃப்ரிடி. 

நியூசிலாந்து அணி:

கப்டில், முன்ரோ, வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், டாம் லதாம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஃபெர்குசன், ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட்.