வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டுனெடின் பகுதியில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் இருவரும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

SA vs IND 1st ODI: ரிங்கு சிங் இல்லை, சாய் சுதர்சன் அறிமுகம் – தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்!

வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். வில் யங் 84 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் உள்பட 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக நியூசிலாந்து 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணியில் சௌமியா சர்கார் டக் அவுட்டில் வெளியேறினார். கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அனாமுல் ஹக் நிதானமாக விளையாடி 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Rohit Sharma, CSK: சென்னைக்கு மாறும் ரோகித் சர்மா – சிஎஸ்கேயின் அடுத்த கேப்டன் ஹிட்மேன்?

லிட்டன் தாஸ் 22 ரன்களில் வெளியேறினார். தவ்ஹீத் ஹிரிடோய் 33 ரன்களில் வெளியேறினார். அபிஃப் ஹூசைன் 38 ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச 30 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!

Scroll to load tweet…