இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சிறப்பாக இருந்ததால், இந்திய அணியில் எந்த வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லாததால், மூன்றாவது போட்டியிலும் அதே அணிதான் ஆடுகிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

நியூசிலாந்து அணியில் எதிர்பார்த்ததை போலவே, ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள், முதல் 2 போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மீது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சர்வ சாதாரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து பவுலிங்கை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் டிக்னெர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக குஜ்ஜெலின் அணியில் இணைந்துள்ளார். இந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு எந்த மாற்றமும் நியூசிலாந்து அணியில் செய்யப்படவில்லை. 

சேஸிங்கில் சிறந்த இந்திய அணியை, இரண்டாவது போட்டியில் சேஸிங் செய்யவிட்டு, அதற்கான பிரதிபலனை அனுபவித்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த முறை டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், சாஹல், ஷமி, பும்ரா. 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்டீ(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஸ்காட் குஜ்ஜெலின், பென்னெட்.