பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் ஆடவில்லை. முதல் டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி 2வது டெஸ்ட்டில் வெற்றி முனைப்பில் களமிறங்கும் நிலையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டாம் பிளண்டெல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சௌதி, மேட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட்.

பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி, ஃபவாத் ஆலம், ஹாரிஸ் சொஹைல், முகமது ரிஸ்வான்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.