2019 உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய போட்டி மாதிரியான ஒரு கிரிக்கெட் போட்டி, அதுவும் உலக கோப்பை ஃபைனல் போட்டியை காணவே முடியாது. ஆட்டமும் டை ஆகி, சூப்பர் ஓவரும் டை ஆகி, விறுவிறுப்பான அந்த போட்டியில் இறுதியில் இங்கிலாந்து அணி கோப்பையை தூக்கியது.

இந்நிலையில், அதன்பின்னர் மீண்டும் நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடும் போட்டியை இன்னும் ஒரு வாரத்தில் பார்க்கலாம். இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

முதலில் டி20 போட்டிகளும் பின்னர் டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. இதில் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த தொடரில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டிம் சௌதி கேப்டனாக செயல்படவுள்ளார்.

டிம் சௌதி தலைமையிலான அணியில் டி கிரான்ட் ஹோம், ஃபெர்குசன், போல்ட், முன்ரோ, கப்டில், டெய்லர் ஆகிய சீனியர் வீரர்கள் அனைவருமே உள்ளனர். வில்லியம்சன் மட்டுமே இல்லை. 

நியூசிலாந்து டி20 அணி:

டிம் சௌதி(கேப்டன்), டிரெண்ட் போல்ட், டி கிராண்ட் ஹோம், லாக்கி ஃபெர்குசன், மார்டின் கப்டில், குஜ்ஜெலின், டேரைல் மிட்செல், முன்ரோ, ஜிம்மி நீஷாம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சேஃபெர்ட், இஷ் சோதி, டெய்லர், டிக்னெர்.