நியூசிலாந்தில் உள்நாட்டு டி20 தொடரான சூப்பர் ஸ்மாஷ் தொடர் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நார்தர்ன் நைட்ஸ் அணி, 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது. 

220 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய காண்டர்பரி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லியோ கார்ட்டரின் காட்டடியால், அந்த அணி 19வது ஓவரிலேயே 220 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

அதிரடியாக ஆடிய லியோ கார்ட்டர் வெறும் 29 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் ஒரே ஓவரில் அடிக்கப்பட்டவை. ஆண்டன் டேவ்கிச் வீசிய 16வது ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் விளாசினார் லியோ கார்ட்டர். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த 7வது வீரர் என்ற சாதனையை லியோ படைத்துள்ளார். அந்த வீடியோ இதோ..

2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். இவரைத்தவிர இன்னும் 5 வீரர்கள் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.