தோனி பிடித்த இதேமாதிரியான ஒரு கேட்ச்சை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பிடித்திருந்தார். 

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனி, ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து மீண்டும் தனது அசாத்திய விக்கெட் கீப்பிங் திறமையை நிரூபித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதோ, அசாத்தியமான அபாரமான கேட்ச்களை பிடிப்பதோ புதிதல்ல. அது பார்த்து பார்த்து பழகியதுதான். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தனது விக்கெட் கீப்பிங் திறமையை ஒரு அபாரமான கேட்ச்சின் மூலம் மீண்டும் காட்டினார். 

பும்ரா வீசிய 27வது ஓவரின் முதல் பந்து, பிராத்வெயிட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும் முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்துக்கும் இடையே சென்றது. அதை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் தோனி. இந்த கேட்ச் தோனியின் விக்கெட் கீப்பிங் திறனை பறைசாற்றும் மற்றுமொரு கேட்ச். 

தோனி பிடித்த இதேமாதிரியான ஒரு கேட்ச்சை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பிடித்தார். உலக கோப்பையில் தொடர் தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது விக்கெட் கீப்பிங்கை மட்டுமல்லாது அவரது ஃபிட்னெஸ் இல்லாத உடலமைப்பையும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக விக்கெட் கீப்பிங்கில் மிரட்டினார் சர்ஃபராஸ். அப்படி மிரட்டியபோது, ஒரு அபாரமான டைவ் கேட்ச்சையும் பிடித்தார்.

சர்ஃபராஸ் பிடித்த அதே கேட்ச்சைப் போலவே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தோனியும் பிடித்தார். இரண்டு கேட்ச்களுமே ஒரே மாதிரியாக இருந்ததால், இரண்டில் எது சிறந்தது என ஒரு கேள்வியை எழுப்பி ஐசிசி டுவீட் செய்திருந்தது. 

Scroll to load tweet…

அதற்கு ரசிகர்கள் பல மாதிரியான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். தோனி இதுபோன்ற கேட்ச்களை பிடிப்பது புதிதல்ல. அதனால் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

தோனி கேட்ச் பிடிக்கும்போது எப்போதாவதுதான் கீழே விழுவார். ஆனால் சர்ஃபராஸ் எப்போதாவதுதான் இதுபோன்ற கேட்ச்சையே பிடிப்பார். அதனால்தான் கீழே விழுந்து தூங்கிவிட்டார் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

தோனி ஃபிட்டாக இருப்பதால், கேட்ச்சை பிடித்து கீழே விழுந்தவுடன் உடனே எழுந்துவிட்டார். ஆனால் கீழே விழுந்த தனியாக எழமுடியாத சர்ஃபராஸை ஸ்லிப்பில் நின்ற மற்றொரு வீரர் தூக்கிவிட்டார். எனவே சர்ஃபராஸின் கேட்ச் சிறந்தது என்று கூறுபவர்கள் கண்டிப்பாக போதையில் இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

இவ்வாறு பலர் பல கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான கருத்துகள் சர்ஃபராஸை கிண்டலடிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.